104
தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்கம் வரி அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய பணவீக்க வீதம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் இது கடுமையான பணவீக்க சூழ்நிலையாக இருக்காது என்றும் அவர் கூறினார்.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் 4.9 சதவீதமாக பதிவாகியிருந்த உணவு அல்லாத பணவீக்கம் நவம்பரில் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.