Home » இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசி!

இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசி!

by Vaishnavi S
0 comment

ஒவ்வொரு நாளும் 12 ராசிகளுக்கான பலன்களை பார்ப்போம். அதன்படி இன்று(பிப்ரவரி 13) எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்களை என்பதை இங்கு பார்ப்போம்.

மேஷம்

முதலீடு விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவீர்கள். பொருளாதார லாபத்தில் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள விஷயங்கள் இன்று முடிய வாய்ப்புகள் உள்ளது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதேசமயம் அவசரமாக எதிர்வினையாற்றுவதைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை. வெளிநாட்டு விவகாரங்களில் ஆர்வம் இருக்கும். செல்வாக்கு மிக்கவர்களை சந்திப்பீர்கள். வேலை வாய்ப்புகள் உருவாகும். கொடுக்கல் வாங்கல்களில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தேவையற்ற நிகழ்ச்சிகளைத் தவிர்க்கவும்.

மிதுனம்

வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். நிதி ஆதாயம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மூத்தவர்களை சந்திப்பீர்கள்.

கடகம்

விரும்பிய காரியங்கள் நிறைவேறும். உறவுகளை வலுப்படுத்துவீர்கள். பல்வேறு செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி மனப்பான்மை ஏற்பட வாய்ப்புள்ளதால், வார்த்தைகளில் கொஞ்சம் கவனம் தேவை.

சிம்மம்

அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். திருமண உறவுகளில் இனிமை அதிகரிக்கும். ஒழுக்கம் கடைப்பிடிக்க வேண்டும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.

கன்னி

நிம்மதி கிடைக்கும் நாள். நிலம், சொத்து விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வாக்குவாதங்கள், சச்சரவுகள் மற்றும் முடிவெடுப்பதைத் தவிர்க்கவும்.

துலாம்

அதிர்ஷ்டம் தேடி வரும் நாள். நம்பிக்கை அதிகரிக்கும். தெரியாத நபர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருங்கள். பெரியோர்களின் அறிவுரைகளைக் கேளுங்கள்.

விருச்சிகம்

மன உறுதி அதிகரிக்கும். சக ஊழியர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முயற்சிகள் மேம்படும். உங்களின் நீண்ட நாள் இலக்கு மீது கவனம் செலுத்தினால் வெற்றிக்கு வாய்ப்பு உண்டு.

தனுசு

உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். பல்வேறு பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையும். இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள்.

மகரம்

குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களுடன் பாசம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்

விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆசை அதிகரிக்கும். முக்கியமான விஷயங்களில் முன்னேற்றம் அதிகரிக்கும். நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மீனம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாய்ப்புகள் தேடி வரும். மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கியமான இடங்களில் உங்களின் மரியாதை கூடும்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00