72
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்றையதினம் மூன்றாவது நாளாக தொடர்ந்து அகழ்வுப்பணி நடைபெற்று வருகின்றது.
குறித்த அகழ்வுப் பணிகள், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்று வருகிறது.
முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நேற்றையதினம் அகழ்வாய்வு நிறைவடையும் போது இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன.
மேலும், குறித்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள் காணப்பட்டதுடன் குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ”இம்மாதம் 24அம் திகதி களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம்
ஆய்வுகள் இடம்பெறவுள்ளன.
இதன்மூலம் இப் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படவுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
2 comments
[…] – கொக்குதொடுவாய் புதைகுழியில் தற்போது அகழாய்வுப் […]
[…] அகழ்வுப் பணியின் போது , 5 மனித எலும்புக்கூடுகளின் […]