77
முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் புதைகுழியில் தற்போது அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
நேற்று (23) மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டன.
தோட்டாக் காயங்கள், வெடிகுண்டு துண்டுகள் மற்றும் விடுதலைப் புலிகளின் உரிமத் தகடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த மனித புதைகுழியில் இருந்து மொத்தம் 26 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டன.
இதேவேளை, கொக்குதொடுவாய் மனித புதைகுழி எவ்வளவு தூரம் பரந்து விரிந்துள்ளது என்பதை பரிசோதிக்க விசேட ஸ்கேனிங் கருவி பயன்படுத்தப்பட்டு
வருகின்றது.