98
வடகொரியாவின் பெண்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி கிம் கோரிக்கை வைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பியொங்யாங்கில் தேசிய தாய்மார்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் வடகொரியா ஜனாதிபதியான கிம் ஜாங்-உன் இந்த கோரிக்கையை தன் நாட்டின் பெண்களிடத்தில் வைத்துள்ளார்.
கடந்த 10 வருடங்களில் வடகொரியாவில் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. ஆதலால் வடகொரிய பெண்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மேற்கொண்டு பேசிய அவர் “எங்கள் தாய்மார்கள் சமூகப்பணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதில் தாய்மார்கள் குழந்தைகளை வளர்ப்பது, அவர்கள் நாட்டின் புரட்சியினை உறுதியாக முன்னெடுத்து செல்வது, சமீபகாலமாக பெருகிவரும் சோசலிசமற்ற பழக்கவழக்கங்களை ஒழிப்பது, குடும்ப நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவது மற்றும் கம்யூனிச நற்பண்புகளை உருவாக்குவது ஆகியன அடங்கும் என்று கூறினார்.
மேலும் நாட்டின் சக்தியை வலுப்படுத்துவதில் தாய்மார்கள் ஆற்றும் பங்கிற்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார்.
கிம் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள கோரிக்கை வைத்த நிகழ்வில் கண்ணீரை துடைத்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Kim Jong Un just started crying on national TV because people are not having enough babies pic.twitter.com/IJd3u2M6An
— Matt Wallace (@MattWallace888) December 5, 2023