165
நாம் தற்போது இணைய காலத்தில் வாழ்ந்து வருகிறோம். உணவு முதல் மருந்துகள் வரை இணய சேவையினால் வீட்டிற்கே வரும் பழக்கம் நடைமுறையில் இருக்கின்றது.
மேலும் இளைஞர்களிடையே சமூக வலைதள மோகமும் விட்டபாடில்லை.
அதிகப்படியான இன்டர்நெட் மோகம் மனச்சிதைவை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நம்மில் பலருக்கு உள்ளுக்குள் இருக்கலாம்.
ஆக்ஸ்ஃபோர்டு இன்டர்நெட் இன்ஸ்டிடியூட் இது குறித்து ஒரு ஆய்வு நடத்தியுள்ளது.
இதில் 168 நாடுகளை சேர்ந்த 15 முதல் 89 வயதுக்குட்பட்ட இரண்டு மில்லியன் மக்களிடமிருந்து பேராசிரியர்கள் ஆன்ட்ரூ ப்ரிசிபில்ஸ்கி (Andrew Przybylski) மற்றும் மேட்டி வூரே (Matti Vuorre)ஆகியோர் தரவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் எந்தெந்த காரணங்களால் மனநலம் பாதிக்கப்படலாம் என்பது குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டது.
இறுதியாக சமூக வலைதளங்களினால் மனநலனில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய பயன்பாட்டின் விளைவு குறித்து ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் மெட்டா போன்ற தளங்களிடமிருந்து வெளிப்படைத்தன்மையான தரவுகளை கோருகின்றனர்.
இருப்பினும் தரவுகள் இதுவரையில் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.