யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில், சுமார் 3 மணத்தியாலத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, கடந்த 2022ம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்தபொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் இசைக்கபட்டமை மற்றும் மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.