108
வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த நிலையில், அவர் விளையாட்டு மனநிலையே இல்லை என்று பிசிசிஐ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தீபக் சாஹரின் தந்தைக்கு மூளை பக்கவாத நோய் இருப்பதாகவும், அவரை அவசரமாக மருத்துவமனையில் சேர்த்து இருப்பதையும் அறிந்ததையடுத்து, அவர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிக்கு முன் தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்.
எனவே, அவர் தென்னாப்பிரிக்கா செல்லவில்லை என்றும் அவர் தன் தந்தையுடன் தங்கி மருத்துவமனை சிகிச்சைகளை கண்காணித்து வருவதாக குறித்த அதிகாரி கூறி இருக்கிறார்.
முன்னதாக தான் அவுஸ்திரேலிய டி20 தொடரின் கடைசி போட்டியில் விலகியது குறித்து தீபக் சாஹர் விளக்கம் அளித்த போது,
தன் தந்தை தான் தனக்கு முக்கியம் என்றும், தற்போது அவர் ஆபத்து கட்டத்தை கடந்து விட்டார் எனவும் கூறி இருந்தார்.
அதனால், அவர் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் பங்கேற்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்து இருக்கிறது.
மேலும், தீபக் சாஹர் தென்னாப்பிரிக்கா வந்தாலும் கூட அவர் தற்போது இருக்கும் மனநிலையில் அவரால் முழு வீச்சில் போட்டியில் பங்கேற்க முடியுமா என தெரியவில்லை.
எனவே, அவர் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் பங்கேற்பதே சந்தேகம் தான் எனக் கூறி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்தானது குறிப்பிடத்தக்கது.