பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தாவிடின், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய சாத்தியகூறு உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை நாடு முழுவதும் திடீர் மின் தடை ஏற்பட்டிருந்தது.
கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த மின்தடை ஏற்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில்இ குறித்த மின் விநியோக பாதையில் உடனடியான சீரமைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட சில பரிந்துரைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
ஆனால் அந்த பரிந்துரைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது ஆபத்தானது என்று இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.