75
பிரித்தானியாவின் உள்துறை அமைச்சராக இருந்த, இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிராவர்மேனை பிரதமர் ரிஷி சுனக் பதவிநீக்கம் செய்துள்ளார்.
பிரித்தானியாவின் பிரதமரான ரிஷி சுனக் தனது அமைச்சரவையில் சில மாறுதல்களை கொண்டு வந்துள்ளார்.
அதன் பொருட்டு, இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிராவர்மேனை பதவி நீக்கம் செய்துள்ளார்.
அவர் வகித்த உள்துறை துறை அமைச்சர் பதவிக்கு ஜேம்ஸ் க்ளெவர்லி பணியமர்த்தப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் இதற்கு முன்பாக வெளியுறவு செயலாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவுத் துறை செயலாளராக பதவியேற்றுள்ளார்.
அண்மையில், சுயெல்லாவின் பதவி நீக்கத்திற்கு காரணமான “பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டக்காரர்களை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை” என்று பேச்சு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் எழுந்த அழுத்தங்கள் காரணமாக ரிஷி சுனக் அவரை பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் பிரதமாரான ரிஷி சுனக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.