98
இன்று பிறந்தநாள் காணும் நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து கூறியுள்ளார்.
அவரது பதிவில், ‘ கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி – மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலம் சூழ வாழிய பல்லாண்டு!’ என தெரிவித்துள்ளார்.
அவருக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில்,
‘ இனிய நண்பரும் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் ஆற்றல்மிகு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்தில் அகம் மகிழ்கிறேன் ‘ என கூறியுள்ளார்.