ஏறத்தாழ, 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது – என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்றையதினம், பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்படி கூறினார்.
குறித்த முறைமையில், 100 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக வெளிநாட்டு ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை விநாயகம் செய்வதில், நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.