140
U-17 உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தோனேசியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜகர்த்தாவில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
முதல் பாதியில் கோல் விழாத நிலையில், ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ஜெர்மனிக்கு கோல் கிடைத்தது.
அந்த அணியின் பாரிஸ் பிருன்னர் (Paris Brunner) அபாரமாக கோல் அடிக்க, அதுவே வெற்றி கோலாக அமைந்தது.
இறுதியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) நடைபெற உள்ள போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
வெற்றி குறித்து ஜெர்மனியின் பயிற்சியாளர் கிறிஸ்டியன் வக் (Christian Wuck) கூறுகையில்,
“ஐரோப்பாவில் இருந்ததைப் போலவே இங்கேயும் நம்பிக்கை உள்ளது. ஒருவேளை நாங்கள் நம்புவதில் சிறந்த அணியாக இருக்கலாம். நாங்கள் தோல்வியை பற்றி நினைக்கவில்லை, வெற்றியை பற்றி தான் நினைக்கிறோம்.
மனதளவில் நாங்கள் பலமாக இருந்தோம். இப்போது நாங்கள் அரையிறுதியில் இருக்கிறோம்.
டிசம்பர் 2 வரை தங்கி இறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
2 comments
[…] Goodison park மைதானத்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் ஆட்டத்தில் மான்செஸ்டர் […]
[…] U17 கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஜேர்மனி அணி […]