102
மும்பையில் நடந்து வரும் இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் மகளிர் இங்கிலாந்து அணி 197 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்திற்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் Heather Knight தலைமையிலான இங்கிலாந்து அணியும், Harmanpreet Kaur தலைமையிலான இந்திய அணியும் மோதி வருகின்றன.
முதலாவதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இங்கிலாந்தின் Danni Wyatt 75 (47), Nat Sciver-Brunt 77 (53) மற்றும் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.
இந்தியாவின் தரப்பில் பந்துவீச்சாளர்கள் ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளும், ஷ்ரேயங்கா பட்டீல் 2 விக்கெட்டுகளும், சைகா இஷாக் (Saika Ishaque) ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.