79
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
36 வயதாகும் ஷகிப் உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக விளங்கி வருகிறார்.
ஆனால் அவரது தலைமையில் உலகக்கோப்பையில் களமிறங்கிய வங்கதேச அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றது.
இந்த நிலையில் வங்கதேசத்தில் ஆளும் நவமி லீக் கட்சி சார்பில் ஷகிப் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை அவர் ஏற்கனவே பெற்றுவிட்டார் என அக்கட்சி நிர்வாகி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஷகிப் தனது சொந்த ஊரான மகுரா அல்லது டாக்காவில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஷகிப் அல் ஹசன் சில மாதங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என தெரிகிறது.
2006ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் ஷகிப், வங்கதேச அணிக்காக 5 உலகக்கோப்பையில் பங்கேற்ற வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.