108
மிச்சாங் புயலின் தாக்கத்தினால் சென்னை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் சீமான் அரசின் நிர்வாகத்தின் மீது கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மாநகரம் மிச்சாங் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
நகரின் பல பகுதிகளில் நீரை வெளியேற்றுவதுடன், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் நிவாரண நிதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் நாம் தமிழர் சீமான் ஆளும் அரசினை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், “திமுக அரசின் நிர்வாகத் தோல்வி சென்னை வெள்ளப்பெருக்குக்கு காரணம்.
வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.4000 கோடி மதிப்பீட்டிலான பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மழையை எதிர்கொள்ளக் கூடிய வடிகால் வாய்ப்புகளும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும் ஒரு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.
ஆனால் அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகளும் செய்யத் தவறி மாநகரத்தையே வாழத் தகுதி அற்ற நிலம் போல மாற்றி இருப்பது வெட்கக்கேடானது” என தெரிவித்துள்ளார்.