யுனைட்டட் சோலர் (United Solar) குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் அமைச்சரவையில் அங்கிகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, 1,500 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புடன் 700 மெகாவாட் சோலார் பவர் திட்டத்தில் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர இந்த திட்டத்தை முன்கொண்டுவந்துள்ளார்.
இந்நிலையில் 1,727 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி குளத்தின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தித் திட்டம் நிறுவப்படும் எனவும் அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.