67
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காண்டலா தெவ்ரி கிராமத்தில், விவசாய பயன்பாட்டிற்காக சுமார் 20 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அந்த கிணறு சரியான முறையில் மூடி வைக்கப்படாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
மகனை நீண்ட நேரமாக காணாததால் பெற்றோர்கள் அவனை தேடியுள்ளனர்.
அப்போது சிறுவன் ஆழ்துளை கிணற்றின் உள்ளே இருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டி சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் மீட்கப்பட்டான்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.