146
ஆப்பிள் நிறுவனத்தின் கண்ணை பறிக்கும் சிவப்பு நிறத்திலான பொருட்களின் விற்பனையில் AIDS நோயாளிகளுக்காக நன்கொடை சேகரிக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் சந்தையில் தனித்த மரியாதையை பெறும்.
அவ்வகையில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ரெட் எனும் நிறுவனத்துடன் இணைந்து எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வியை எதிர்த்து போராடும் நோயாளிகளுக்கான நன்கொடையை ஆப்பிள் நிறுவனம் வழங்கி வருகிறது.
ஆப்பிள், சிவப்பு நிறத்திலான தனது நிறுவனத்தின் பொருட்களை விற்பதன் மூலம் அதில் கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை, உலகலாவிய நிதியம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறது.
நீங்கள் வாங்கும் சிவப்பு நிறத்திலான ஆப்பிள் பொருட்களின் விலையில் கணிசமான பங்கு நன்கொடையாக செல்லும்.
ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் 14 ப்ளஸ் ஆகியவை சிவப்பு நிறத்தில் கிடைக்கின்றன.
ஐபோன் எஸ்ஈ சிவப்பு நிறத்திலான போன்களில் ஆப்பிளின் மிகக்குறைவான விலையுள்ள போன் ஆகும்.
மேலும், சிவப்பு நிறத்தில் ஐபோன் கேஸ்கள், ஆப்பிள் வாட்ச் ஸ்ட்ராப்கள் ஆகியவற்றை வாங்குவதன் மூலம் நீங்களும் நன்கொடை அளிக்கலாம்.