109
இந்திய சட்டசபை தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ளதால் ஆட்சி அமைக்க உள்ளது.
இன்று ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
எனவே, தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலை வகித்து வருகிறது. கிட்டத்தட்ட ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்து பாஜகவை ஓரங்கட்டியுள்ளது. ரேவந்த் ரெட்டி அங்கு வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக முதன்மை பெற்றுள்ள மூன்று மாநிலங்களில் முதல்வர் யார் என்ற கேள்விக்கு, நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோர் முடிவெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் , “சனாதன தர்மத்தை எதிர்த்து பேசினால் அதன் விளைவுகளை அனுபவிக்க நேரிடும். பாஜகவின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.