87
2024ம் ஆண்டு குறைவான விலையில் மேக்புக் லேப்டாப்களை வெளியிட ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் நிறுவனம் தனக்கென பாரிய வாடிக்கையாளர்களை உலகளவில் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இருப்பினும் போட்டிகள் அதிகமாகி வரும் இந்த சூழலில், அந்நிறுவனம் சவால்களை எதிர்கொள்ள புதிய முடிவுகளையும் எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
குறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் கிடைக்கும்பட்சத்தில் அதன் போட்டியாளர்கள் கடும் நெருக்கடியை சந்திக்கக் கூடும் என்பதால் தற்போது ஆப்பிள் அதிரடியான முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதாவது, சந்தையில் தன்னை மேலும் வலிமைப்படுத்தும் வண்ணம் ஆப்பிள் நிறுவனம் புதிதாக 12 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவுள்ள மேக்புக் லேப்டாப்களை 60,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஆப்பிள் விற்பனை செய்ய உள்ளது.
இவ்வளவு குறைந்து விலைக்கு மேக்புக் கிடைக்கும் என்றால் சந்தையில் ஆப்பிளின் பங்குகள் ஜெட் வேகத்தில் உயரம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.