115
அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாகிய நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் மற்றொரு கைதி உயிரிழந்த நிலையில், குறித்த வழக்கு இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
விசாரணையின் போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரிழந்தவருடன் கைதாகி, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்ட மற்றைய கைதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த வழக்கு வட்டுக்கோட்டை பொலிஸாரிடமிருந்து மாற்றப்பட வேண்டும் என சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வழக்கில் சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட பலர் ஆஜராகியிருந்தனர்.
அண்மையில், திருட்டு சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு, சந்தேக நபர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். குறித்த நபர்கள் விளக்கமறியலில் வைககப்பட்ட நிலையில் சித்திரவதைக்கு உள்ளானமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே இரண்டாவது சந்தேக நபர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
1 comment
[…] என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்தார். வட்டுக்கோட்டை இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த […]