73
மலேசியாவில் இடம்பெற்ற 36 நாடுகள் பங்குபற்றிய மனக் கணிதப் போட்டியில் ஆறு வயதிற்கு உட்பட்ட பிரிவில் யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனும் திருநெல்வேலி Ucmas மாணவனுமான சுதர்சன் அருணன் A1 பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2 ஆம் இடத்தை பெற்றார்.
இம் மாணவன் இலங்கையில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற நிலையில் மலேசியா கோலாலம்பூரில் இடம்பெற உள்ள சர்வதேச மனக் கணிதப் போட்டிக்கு செல்லத் தெரிவானார்.
இன் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்வதேசப் போட்டியில் 36 நாடுகளில் இருந்து பலர் போட்டயில் பங்குபற்றிய நிலையில் அருணன் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்தான்.
குறித்த மாணவன் மலேசியா செல்வதற்கு உதவி செய்யுமாறு தியாகி அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரனிடம் தனக்கு உதவி செய்யுமாறு நேரில் சென்றார்.
இன் நிலையில் பயணச் செலவுகள் முழுவதையும் தான் வழங்குவதாக் கூறி பெற்றோர்களை அழைத்து பயணச் செலவுகளுக்கான பணத்தொகையை அண்மையில் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.