76
இலங்கை கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நேற்று (15) முடித்து வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் ஏதேனும் நியாயமான சட்டத் தேவை ஏற்பட்டால், மனுவை திரும்பப் பெற மனுதாரர்களுக்கு உரிமை அளித்து, மனு மீதான விசாரணையை முடித்து வைக்கும் என நீதிமன்ற குழாம் உத்தரவிட்டுள்ளது.