91
தமிழ்ப்பட நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இருவேறு கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது.
லியோ வெற்றி விழாவில் 2026ஆம் ஆண்டு கப்பு முக்கியம் பிகிலு என விஜய் கூறியது கிட்டதட்ட அவர் அரசியலுக்கு வருவது உறுதி என ரசிகர்கள், விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், “நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரலாம். அவர் மட்டுமல்ல அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான தகுதி உள்ளது.
எனவே விஜய்யும் அரசியலுக்கு வரலாம், அதற்கு முன்னதாக அவர் கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.