132
நடிகர்கள் விஷ்ணு விஷால், அமீர்கானுக்கு உதவிய அஜித்தை விமர்சித்து நடிகர் போஸ் வெங்கட் ட்வீட் செய்தது வைரலாகியுள்ளது.
சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பலர் வீடுகளில் முடங்கியுள்ளனர். பொதுமக்களை போல் நடிகர்கள் உட்பட பல பிரபலங்களுக்கும் இதே நிலைதான்.
நடிகர் விஷ்ணு விஷால் தனது வீட்டினை சுற்றியும் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டுள்ளது உதவி கோரினார்.
அதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் படகுடன் வந்து விஷ்ணு விஷால், அவரது மனைவி ஜுவாலா கட்டா ஆகியோரை மீட்டனர்.
அவர்களுடன் அமீர்கானும் இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் உலகளவில் பிரபலமான நடிகராக இருந்து தன்னை மீட்க வேண்டும் என அவர் கேட்கவில்லை.
இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. தற்போது புயல் ஆந்திராவில் கரையை கடந்துவிட்டது. இந்த நிலையில் தான் நடிகர் அஜித்குமார் மீட்கப்பட்ட அமீர்கான், விஷ்ணு விஷால் ஆகியோருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
விஷ்ணு விஷால் இந்த புகைப்படத்தினை பகிர்ந்து, ‘எங்கள் நிலைப்பற்றி பொதுவான நண்பர் மூலம் அறிந்து, எப்போதும் உதவக்கூடியவரான நடிகர் அஜித் எங்கள் வில்லா நண்பர்களுக்கும் போக்குவரத்து உதவிகளை செய்து கொடுத்தார். லவ் யூ அஜித் சார்’ என குறிப்பிட்டார்.
இந்த பதிவுக்கு விமர்சனம் செய்து நடிகர் போஸ் வெங்கட் ட்வீட் செய்துள்ளார்.
அதில் அவர், ‘வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு..இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்…(உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு)
ஆனால் உங்களை விரும்பும் , டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,.(ஒரு boat அவனுக்கும் விட்டிருக்கலாம்)’ என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்….
(உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்) pic.twitter.com/klDj5wNixx— Bose Venkat (@DirectorBose) December 6, 2023