75
ஒரு துவட்டும் துண்டு (Towel Skirt) 77,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது அனைவரின் புருவத்தையும் உயர செய்துள்ளது.
நாம் அனைவரும் ஆடைகளுக்காக செலவு செய்வது சாதாரண விடயம் தான்.
ஆனால், செலவு செய்யும் தொகைக்கு ஏற்ப ஆடைகளின் தரம் இருக்க வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
Branded துணிகள் மற்ற துணிகளை விட விலை அதிகம் இருப்பதும், அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பதும் இயல்பான ஒன்றாகவே இருந்து வருகிறது.
இப்போதெல்லாம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகர்கள் அணியும் ஆடைகளை தேடி, அதைப்போலவே, அதே நிறுவனத்தில் ஆடைகள் வாங்கும் இளைஞர்கள் அதிகமாகி வருவதை காண முடிகிறது.
இந்நிலையில் Balenciaga நிறுவனமானது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு துண்டினை (Towel Skirt) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் விலையாக 925 அமெரிக்க டொலர்கள் என நிர்ணயித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 77,000 ஆகும்.
ஒரு துண்டிற்கு இவ்வளவு விலையா என அதிர்ச்சியான இணையவாசிகள் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர்.