82
உலகக்கோப்பையில் 5வது முறையாக அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியுற்றதால், அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கொல்கத்தாவில் நேற்று நடந்த உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்கள் எடுத்தது. டேவிட் மில்லர் சதம் விளாசினார்.
பின்னர் ஆடிய அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 62 (48) ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 8வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆனால், தென் ஆப்பிரிக்க அணியோ 5வது முறையாக இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா 1992, 1999, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதி வரை வந்தது. இதனால் டாப் 8 அணிகளில் ஒன்றாக இருந்தும் இறுதிப்போட்டியையே பார்க்காத அணியாக தென் ஆப்பிரிக்கா உள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில் வரும் 19ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
2003ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிடம் கோப்பையை இழந்த இந்திய அணி, இம்முறை அதற்கு பழி தீர்க்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.