78
ரஷ்யாவில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் உக்ரேனியாவின் ராக்கெட் லான்ச் மூலம் நடைபெற்ற தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய உக்ரேனிய போர் இன்னும் முடிவடையாத நிலையில் பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் 810வது கடற்படைப் பிரிவின் நினைவாக விருது வழங்கும் விழா குமச்சோவ் எனும் கிராமத்தில் நடைபெற்றது.
வீரர்கள் பலர் குழுமியிருந்த இந்நிகழ்வில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 25 ரஷ்ய ராணுவ வீரர்களும், இசைக்கச்சேரி நடத்திக்கொண்டு இருந்த நடிகை ஒருவரும் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த நடிகை ரஷ்யாவின் புகழ்பெற்ற பொலினா மென்ஷிக் (Polina Menshikh) என்பது தெரிய வந்தது.
டொனெட்ஸ்கில் உள்ள ரஷ்யா ஆதரவு அதிகாரிகள், “கர்னல் டிமிட்ரி க்ரபாச்சின் கீழ் இருந்த 27வது ராக்கெட் பீரங்கி படைதான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றனர்” என தெரிவித்தனர் .