56
பிரேசில் அணிக்கு எதிரான போட்டியின்போது அர்ஜெண்டினா ரசிகர்கள் தாக்கப்பட்டதால் மெஸ்சி வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கான போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிகள் மோதின.
போட்டி தொடங்கும் முன் இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதனைத் தடுக்க முயன்ற பொலிஸார் அர்ஜென்டினா ரசிகர்களை மோசமாக தாக்கினர்.
இதனை கவனித்த மெஸ்சி மற்றும் சக வீரர்கள் உடனடியாக ரசிகர்களை தாக்காதீர்கள் என பொலிசாரிடம் கூறினர்.
அதனைத் தொடர்ந்து தாக்குதல் நின்ற நிலையில் மெஸ்சி சக வீரர்களுடன் விளையாட மாட்டோம் எனக் கூறி மைதானத்தில் இருந்து வெளியேறி அறைக்கு சென்றார்.
பின்னரே சென்ற நடுவர்கள் அவரையும், பிற வீரர்களையும் சமாதானப்படுத்தி விளையாட வைத்தனர்.
இந்தப் போட்டியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கால்பந்து உலகில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.