129
பிரபலமான ஹூண்டாய் நிறுவனமானது, மிச்சாங் புயல் நிவாரண நிதியாக 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை உலுக்கிச் சென்றது.
தமிழ்நாட்டில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின.
இதில் தமிழக தலைநகரான சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான மழையை மிச்சாங் புயல் கொட்டித் தீர்த்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் நிரம்பி மக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.
மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த மிக அதிக கனமழையினால் பெருத்த சேதங்களை சென்னை சந்தித்துள்ளது.
பல இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள பாதிப்பினை தொடர்ந்து, நடிகர்கள் உட்பட பலரும் நிவாரண நிதியாக தன்னால் இயன்றதை அளித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக ஹூண்டாய் நிறுவனமானது 3 கோடி ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளது.