67
வைகுண்ட ஏகாதசியையொட்டி, வரும் டிசம்பர் 23ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும், அதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் வரும் 10ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியனையொட்டி சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் 10 நாட்கள் நடைபெறும்.
இந்த 10 நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள். அவர்கள் தரிசனம் செய்ய
இந்த ஆண்டு 7 லட்சம் டிக்கெட்டுகள் வழங்க உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.