ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் பேருந்து சாரதி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
இங்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் இன்று காலை 5.55 மணியளவில் இறை வழிபாட்டிற்காக பூ பறிக்கச் சென்ற போது இந்தச் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் சந்தேகநபர் ஆகிய இருவரும் ஒரே பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், மோதல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையை செய்த பின்னர் சந்தேகநபர் வாகரை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயிலில் ஏறி தப்பிச் சென்ற போது சந்தேக நபரை மீகொட பொலிஸார் கைது செய்து ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துன்மோதர, நுகெதென்ன பிரதேசத்தில் வசிக்கும் நபர் என தெரிவிக்கப்படுகின்றது.