யாழ் மாவட்டத்தில், அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தை சுவீகரிக்க வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சிகளை கைவிட வேண்டும் – என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கட்டமைப்பின் தேசிய அமைப்பாளருமான என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
குறித்த பிரதேசத்தை சுவீகரிப்பதற்கு, வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ள நிலையில், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பகுதியை நம்பி, தொழில் புரிந்து வருகின்றன. இந் நிலையில் அதனை குழப்பும் விதத்தில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
கடந்த காலத்தில் குறித்தபகுதியில் கண்டல் தாவரங்களை நட்டுவிட்டு, தற்போது அரசாங்கம் திட்டமிட்டு காணிகளையும் இடங்களையும் அபகரிக்கின்ற செயற்பாடுகளாகவே இவற்றை நாம் பார்க்கின்றோம்.
அரச இந்த கபளீகர முயற்சியை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.