225
சென்னை – திருச்சி 4 வழிச்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே கன்டெய்னர் லொறி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர்.
சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று அறந்தாங்கி நோக்கி கிளம்பியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து மிக வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை நடுவே உள்ள தடுப்பான்களின் மீது மோதி அடுத்த சாலையில் புகுந்தது.
அப்போது எதிரே வந்துகொண்டு இருந்த கன்டெய்னர் லொறி மீது பேருந்து நேருக்கு நேராக மோதியது.
இந்த விபத்தில் பேருந்து மற்றும் லொறி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்தவர்களை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தின் காரணமாக, அந்த வழித்தடத்தில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.