117
இந்தியாவில் ஒன்லைன் மூலம் உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டு வீடுகளில் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.
இதில் எந்த உணவு அதிகமானவர்களால் ஆர்டர் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்படுகிறது என்று ஒரு தனியார் நிறுவனம் வருடா வருடம் வெளியிட்டு வருகிறது.
அதில் தொடர்ந்து 8வது ஆண்டாக பிரியாணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு ஒவ்வொரு விநாடிக்கும் 2.5 பிரியாணிக்கான ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 5.5 சிக்கன் பிரியாணிக்கும், ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர்கள் பெறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 1ஆம் திகதியில் மட்டும் 4.30 லட்சம் பிரியாணிகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
மேலும் ஆர்டர் செய்யப்பட்டதில் 6யில் ஒன்று ஹைதராபாத் பிரியாணியாகும்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடந்த நவம்பர் 19ஆம் திகதி ஒரு நிமிடத்திற்கு 183 பீட்சாக்கள் ஆர்டர்கள் பெறப்பட்டன.
மேலும், மும்பையை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் 42.3 லட்ச ரூபாய்க்கு உணவுகளை ஆர்டர் செய்து முதலிடத்தில் உள்ளார்.
மேலும், நிறுவனத்தின் ஊழியர்கள் உணவு டெலிவரிக்கென ஒட்டு மொத்தமாக, 16.64 கோடி கிலோ மீற்றர்கள் பயணித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.