78
தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பின்னர் பல்வேறு நலத்திட்டங்களை அரசு மூலமாக செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு அம்சமாக மாநில அளவில் குறும்பட போட்டிகள் நடைபெற்றன.
அதன் முடிவில் வெற்றியாளர்களை அரசு சார்பில் தீபாவளியையொட்டி ஜப்பானுக்கு சுற்றுலா கூட்டிச்சென்று திரும்பியுள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ்.
சத்தமே இல்லாமல் இந்நிகழ்வு நடந்தேறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மாணவர்கள் ஜப்பானை பார்த்த பரவசத்தில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர்.
மாணவர்கள் ஜப்பான் நாட்டின் போக்குவரத்து பற்றி, அங்குள்ள தமிழ்ச்சங்கம் பற்றி, ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை பற்றி, அருங்காட்சியகம் மற்றும் ஒலிம்பிக் ஸ்டேடியம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்ததை மாணவர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்தப் பயணம் மனதளவில் என்னை நிறைய மாற்றி உள்ளது. சுறுசுறுப்பாக இருப்பது பற்றியும், சுத்தமாக இருப்பது பற்றியும் எப்படி உழைக்கவேண்டும் என்பதை எல்லாம் புரியவைத்துள்ளது.
இந்தப் பயணத்தை எங்களுக்காக ஏற்பாடு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும், முக்கியமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மிகப் பெரிய நன்றிகள் என்கின்றனர் மாணவர்கள்.
வெளிநாட்டு சுற்றுலா என்பதே பலரின் கனவாக இருந்து வரும் நிலையில், அரசு சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களை ஜப்பான் சுற்றுலா கூட்டிச் சென்றதை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.