Home » இன்றைய ராசிபலன்: 3 ஏப்ரல், 2024

இன்றைய ராசிபலன்: 3 ஏப்ரல், 2024

by namthesamnews
0 comment

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 21 ஆம் தேதி புதன்கிழமை 03.04.2024 சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

எதிர்ப்புகளை தாண்டி தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தை நண்பர்கள் மூலமாக விருத்தி செய்வீர்கள். கழுத்து வலியால் துன்பப்பட்ட தகப்பனாருக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.

ரிஷபம்

அலட்சியமாக பயணம் மேற்கொண்டால் கைப் பொருளை இழப்பீர்கள். வியாபாரம் சுணக்கமாக நடப்பதால் மனக்கவலைப்படுவீர்கள். உரிய காலத்தில் கடனை அடைக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.

மிதுனம்

இருசக்கர வாகனத்தில் இரவு நேர பயணங்களை மேற்கொள்ளாதீர்கள். வியாபாரம் சம்பந்தமாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். நெருக்கமாக இருந்த நண்பரே போட்டியாக வருவதால் மன வேதனைப்படுவீர்கள்.

கடகம்

எண்ணிய காரியங்களை எளிதில் நிறைவேற்றுவீர்கள். மங்கல நிகழ்ச்சியால் வீட்டை கலகலப்பாக மாற்றுவீர்கள். வயதான பெற்றோர்களால் வாயாரப் பாராட்டப்படுவீர்கள்.

சிம்மம்

ஆடல் பாடல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக நாட்டத்துடன் கலந்து கொள்வீர்கள். அனாவசியமான செலவுகளால் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாவீர்கள்.

கன்னி

கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். உறவினர்களால் தலைகுனிவை அடைவீர்கள். என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் சின்னச் சின்ன தொல்லைகளால் இம்சைப்படுவீர்கள்.

துலாம்

எதிரிகளின் சூழ்ச்சியை இறுமாப்போடு முறியடிப்பீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் அடைவீர்கள். வாகனங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்

உங்கள் முயற்சிகள் முளைவிட்டு மரமாகி நல்ல கனிகள் கொடுப்பதை பார்த்து களிப்படைவீர்கள். வியாபாரத்திற்காக பணம் புரட்டுவீர்கள். ஓடி வந்து உதவி செய்யும் நண்பர்களை மறக்காதீர்கள்.

தனுசு

அனாவசியச் செலவுகளால் அவதிப்படுவீர்கள். உதவி செய்வதன் மூலம் உங்கள் மரியாதையை உயர்த்திக் கொள்வீர்கள். இந்த நாளில் போட்டி பந்தயங்களில் இறங்காதீர்கள்.

மகரம்

நண்பரின் ஒத்துழைப்பால் ஓரளவு நன்மையை அனுபவிப்பீர்கள். உடல்ரீதியான உபாதைகளை எதிர்நோக்குவீர்கள். மருத்துவ செலவுகளுக்காக கடன் வாங்குவீர்கள்.

கும்பம்

மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். விழிப்போடு வாகனம் ஓட்டவில்லை என்றால் விபத்தில் சிக்குவீர்கள். பணியாளர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

மீனம்

ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல வருமானம் பெறுவீர்கள். வெளிநாட்டு நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விஸ்தரிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமையை நீக்கி உறவை பலப்படுத்துவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00