சோபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை 28.03.2024, சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
தொழில் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான முடிவு காண்பீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்து தலை நிமிர்ந்து நிற்பீர்கள்.
ரிஷபம்
அக்கம் பக்கத்து சில்லறை சண்டையில் மாட்டிக் கொள்வீர்கள். இருப்பினும். அதை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்களில் விரும்பத்தகாத செயல்களை எதிர்கொள்வீர்கள்.
மிதுனம்
நினைத்த காரியத்தை நிதானமாக நிறைவேற்றுவீர்கள். உங்கள் வாக்கு வன்மையால் வியாபாரத்தில் வருமானத்தைப் பெருக்குவீர்கள். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறி கொள்வீர்கள்.
கடகம்
வியாபாரத்தை விரிவுபடுத்த வித்தியாசமாக சிந்திப்பீர்கள். தொழில்துறை போட்டிகளை தகர்த்து எறிவீர்கள். சில நேரங்களில் மற்றவர் பேச்சுகளை தவறாக புரிந்து கொள்வீர்கள்.
சிம்மம்
நீங்கள் விரும்பாத இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் மிகுந்த அல்லல்படுவீர்கள். குழந்தை பாக்கியம் ஏற்பட்டு குதூகலம் அடைவீர்கள்.
கன்னி
ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத ஏற்றம் அடைவீர்கள். கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்பைப் பெறுவீர்கள். கடுமையான நோய் தாக்கத்திலிருந்து விடுபடுவீர்கள்.
துலாம்
பண வரத்து அதிகமாகி வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். வெளிநாட்டுப் பயணத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். உயரதிகாரிகள் மூலம் உத்தியோகத்தில் உதவிகள் பெறுவீர்கள்.
விருச்சிகம்
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் நிலை குலைந்து போவீர்கள். கைக்கு எட்டிய வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். வியாபாரக் கடன்களை வசூலிப்பதில் சிரமப்படுவீர்கள்.
தனுசு
அலுவலகப் பணி தொடர்பாக அலைய வேண்டிய கட்டாய நிலைக்க ஆளாவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள்.
மகரம்
ஆன்மீகப் பணியில் அதிக நாட்டம் கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள்.
கும்பம்
உண்மையாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பீர்கள். தொழில் தொடர்பான இழுபறி நிலைகளை மாற்றுவீர்கள்.
மீனம்
பெண்கள் துணிச்சலுடன் செயலாற்றி காரியசித்தி அடைவீர்கள். விருப்பமான உறவுகளுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)