Home » இன்றைய ராசிபலன்: 22 மார்ச், 2024

இன்றைய ராசிபலன்: 22 மார்ச், 2024

by namthesamnews
0 comment

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 22.03.2024, சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

ஓடி ஓடி உழைத்த பணத்தை ஒருமுகப்படுத்த முயற்சி செய்வீர்கள். வேறு ஒருவரின் பெயரில் உள்ள உங்கள் நிலப்பட்டாவை மாற்றுவீர்கள். தொழில் போட்டிகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

ரிஷபம்

அலுவலகத்தில் நீங்கள் பட்ட சிரமங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வருவீர்கள். சங்கடப்பட்ட மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் வளர்த்து கொள்வீர்கள்.

மிதுனம்

மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் சிக்கலான வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் திறமையைப் பார்த்து சிலர் பொறாமைப்படுவார்கள். வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி லாபத்தைப் பெருக்குவீர்கள்.

கடகம்

தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்காக உத்தரவாதக் கடிதம் கொடுக்காதீர்கள். தவறான வழிகாட்டுதலுக்கு அவசரப்பட்டு தலை ஆட்டாதீர்கள்.

சிம்மம்

சுபகாரியத் தடைகளை நீக்கி சொந்தங்களை ஒன்று சேர்ப்பீர்கள். வியாபாரத்தில் மந்த நிலையை எதிர் நோக்குவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள்.

கன்னி

உங்கள் உழைப்புக்குப் பரிசாக அலுவலகத்தில் உன்னத உயர்வை அடைவீர்கள். வேலையிடத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். சுணங்கிக் கிடந்த வீட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடத்துவீர்கள்.

துலாம்

தொழிலை மேம்படுத்த நீங்கள் கேட்ட உதவிகளை தடையில்லாமல் பெறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை குறைந்து நிம்மதி அடைவீர்கள்.

விருச்சிகம்

முன்பு நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு இன்று தீர்வு காண்பீர்கள். திடீரென்று வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை நிலவி வந்த குழப்பமான சூழ்நிலையை தீர்ப்பீர்கள்.

தனுசு

எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தால் அவமானப்படுவீர்கள். உங்கள் அவசரத்திற்கு அரசாங்க வேலைகள் நடக்காமல் அவதிப்படுவீர்கள்.

மகரம்

அரசு வேலையில் சட்டத்தை மீறி நடக்காதீர்கள். அதனால் சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். ஆடம்பரச் செலவால் சேமிப்பை கரைப்பீர்கள். மனைவியின் மனக்குறையை போக்கி சந்தோஷத்தை நிலை நாட்டுவீர்கள்.

கும்பம்

உங்கள் மனதில் இருந்த இனம்புரியாத பயம் விலகி ஊக்கமடைவீர்கள். உடன் வேலை செய்வோரின் ஒத்துழைப்பால் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

மீனம்

பிள்ளைகளின் நடவடிக்கையை அணுக்கமாகக் கண்காணிக்க தவறாதீர்கள். அவர்களின் படிப்புக்காக பழைய சேமிப்பைப் பயன்படுத்துவீர்கள். ஐடி ஊழியர்கள் அனுகூலமான பலனைப் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00