Home » இன்றைய ராசிபலன்: 18 மார்ச், 2024

இன்றைய ராசிபலன்: 18 மார்ச், 2024

by namthesamnews
0 comment

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 5 ஆம் தேதி திங்கட்கிழமை 18.03.2024, சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகளை நீக்குவீர்கள். அக்கம்பக்கத்தினருடன் சுமூகமாக உறவைப் பேணுவீர்கள். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகளை பெறுவீர்கள்.

ரிஷபம்

தொழிலை விரிவுபடுத்த வங்கி லோன் பெறுவீர்கள். உறவினர்களின் ஆதரவால் உற்சாகமடைவீர்கள். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்

வெளிநாட்டில் இருந்து வர வேண்டிய முக்கிய தகவல்கள் தாமதமாவதால் டென்ஷனாவீர்கள். அரசுத் துறை பணியாளர்கள் அலட்சியமாக நடந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள்.

கடகம்

வேலை காரணமாக சில நாட்கள் குடும்பத்தைப் பிரிவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட பிரச்சனையால் நிம்மதி இழப்பீர்கள்.

சிம்மம்

தங்க நகைகள் வாங்கி இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப் படுத்துவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தொழில் துறையில் முன்னேற்ற அடைவீர்கள்.

கன்னி

தனியார் துறையில் ஓவர் டைம் பார்த்து சம்பாதிப்பீர்கள். ஒர்க் ஷாப் நடத்துபவர், டீக்கடை, பெட்டிக் கடைக்காரர்கள் திருப்தியான லாபம் பெறுவீர்கள்.

துலாம்

வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் வீடு கட்ட திட்டம் தீட்டுவீர்கள். பணியாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார்கள்.

விருச்சிகம்

புத்திசாலித்தனமாக தொழிலை நடத்த முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வரும் வில்லங்கங்களை அறிவுக் கூர்மையால் தீர்ப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களில் தடை ஏற்பட்டு தடுமாற்றம் அடைவீர்கள்.

தனுசு

விருந்தினர் வருகையால் வீட்டை கலகலப்பாக்குவீர்கள். அதற்காக ஆடம்பரச் செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதலான லாபம் பார்க்க பாடுபடுவீர்கள்.

மகரம்

விளையாட்டுக்குப் பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்காதீர்கள். மனைவியோடு மல்லுக் கட்டாதீர்கள். தொழிலை மேம்படுத்த கடுமையாக உழைப்பீர்கள்.

கும்பம்

கடன் வாங்கி குடும்பத் தேவையை நிறைவு செய்வீர்கள்‌. பணியாளர்கள் சம்பளப் பற்றாக்குறையால் சங்கடப் படுவீர்கள். எதிர்பார்த்து கிடைக்காத பணம் சிலருக்கு எதிர்பாராமல் வந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம்

குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்கள். எதிர்பார்த்ததைவிட வியாபாரத்தில் லாபத்தை பெருக்குவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00