Home » பங்குனி மாதத்தில் கோடி கோடியாக தேடி வரும் வருமானம் யாருக்கு?

பங்குனி மாதத்தில் கோடி கோடியாக தேடி வரும் வருமானம் யாருக்கு?

by namthesamnews
0 comment

பங்குனி மாதம் வசந்த காலத்தின் தொடக்கம். தமிழ் மாதங்கள் 12ல் கடைசி மாதம். பங்குனி மாதம் முழுவதும் சூரியன் மீன ராசியில் பயணம் செய்வதால் மீன மாதம் என்று அழைக்கப்படுகிறது.

மேஷம்:

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே,கடல் கடந்து பயணம் போவீங்க.

வியாபாரத்தில் சில பிரச்சனைகளைச் சந்தித்த நீங்கள் இந்த மாத மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தைக் காணப் போறீங்க. திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. தடை இல்லாமல் காரியங்கள் நடக்குமுங்க.

ரிஷபம்:

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே, தொழிலை எப்படி நடத்தப் போகிறோம் என்று மனம் சங்கட்டப்படுவீங்க. நல்ல நண்பர்களின் ஆலோசனையால் சிக்கலில் இருந்து விடுபடுவீங்க.

ஏதாவது ஒரு எதிர்ப்பு தொழிலுக்கு உண்டாகுமுங்க. புத்திசாலித்தனத்தால் அதை முறியடிப்பீங்க. திருத்தணி முருகனை வழிபட்டால் திருப்தி உண்டாகுமுங்க.

மிதுனம்:

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே, மற்றவர்களை மட்டம் தட்ட நினைக்காதீங்க. மேலிடம் சொல்வதைக் கண்ணை மூடிக்கொண்டு கேளுங்க.

இனிமையாகப் பேசி வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வீங்க. கற்பக விநாயகரை கைதொழுது நில்லுங்க. காரியசித்தி உண்டாகுமுங்க.

கடகம்:

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே, அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாமுங்க. கையில் வாங்கிய காசு பையில் போடும் முன் மாயமாகுமுங்க.

இந்த மாத பிற்பகுதியில் தொட்ட காரியங்கள் வெற்றியடையுமுங்க. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாளை வழிபடுங்க. திருப்பங்கள் உண்டாகுமுங்க.

சிம்மம்:

அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, உத்தியோகத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீங்க.

வாகனங்கள் வாங்கி விற்பதன் மூலம் நல்ல லாபம் பார்ப்பீங்க. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேருமுங்க. வைத்தீஸ்வரனை வழிபடுங்க. வியாபார விருத்தி உண்டாகுமுங்க.

கன்னி:

அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, வாக்கு வன்மையால் வழக்குகளை பேசித் தீர்ப்பீங்க. அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறுமுங்க.

கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்குமுங்க. ஒத்தக்கடை யோக நரசிம்ம பெருமாளை வழிபடுங்க. நோய் நொடிகள் விலகுமுங்க.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00