தை மாதம் 28ஆம் திகதியான இன்று சந்திர பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.
இந்நாளில் 12 ராசிகளுக்கும் நாள் எப்படி இருக்கும் என்று இங்கே காண்போம்.
மேஷம்
சிக்கலான பணிகளை பெண்கள் மூலம் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
தொழிலில் முதலீடு செய்வீர்கள்.
வேலையைப் பொறுத்தவரை உற்சாகமான நாளாக அமையும்.
ரிஷபம்
வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஏற்பாட்டினை செய்வீர்கள்.
நண்பர்கள் வாயிலாக புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிட்டும்.
முக்கிய உதவி ஒன்று காதலியிடம் இருந்து கிடைக்கும்.
மிதுனம்
கவனக்குறைவாக வேலை செய்தால் பணிநீக்கம் செய்யப்படும் சூழல் ஏற்படும்.
நீங்கள் எப்போதோ செய்த நல்ல காரியங்களுக்கான பலன் இன்று உங்களுக்கு கிட்டும்.
கடகம்
வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.
புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள்.
கடுமையாக முயற்சித்து கடனை அடைக்க முற்படுவீர்கள்.
சிம்மம்
வியாபாரிகளுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் நாள்.
உங்கள் எதிர்கால நலனை கருதி நிலத்தில் முதலீடு செய்வீர்கள்.
பெண்களின் சேமிப்பு தக்க சமயத்தில் கைகொடுக்கும்.
கன்னி
வேலை காரணமாக குடும்பத்தை பிரிந்து செல்ல வேண்டிய நிலை வரும்.
மாமியார் மருமகள் சண்டையால் நிம்மதி பறிபோகும்.
யாருடைய ஆசை வார்த்தையை நம்பியும் ஏமாற வேண்டாம்.
துலாம்
எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்காமல் தடுமாற்றம் ஏற்படும்.
பெரியாளாக கட்டிக்கொள்ள ஆடம்பர செலவுகளை செய்வீர்கள்.
தொழிலுக்கான பணத்தை புரட்டுவதில் சிரமம் ஏற்படும்.
விருச்சிகம்
நீங்கள் இன்று எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
மனைவி உங்களை புரிந்து நடப்பதால் மன நிம்மதி உண்டாகும்.
கூட்டாக செய்யும் தொழிலில் லாபம் கொட்டும்.
தனுசு
தொழிலாளர் பற்றாக்குறையால் வேலையில் சுணக்கம் ஏற்படும்.
அலுவலகத்தில் மேலதிகாரிகள் குறை சொல்லாத அளவிற்கு பணியில் கவனமாக இருப்பீர்கள்.
பிறரின் பேச்சைக் கேட்டு உங்கள் வேலையை கோட்டைவிட வேண்டாம்.
மகரம்
இன்று நீங்கள் கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.
பொருளாதார சரிவால் உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு மரியாதை குறைவு ஏற்படும்.
வேலைப்பளு குறைந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்.
கும்பம்
பிறரிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடுவீர்கள்.
எடுத்த காரியத்தை முடிக்க பொறுமை அவசியம்.
வேலை சரிந்த விடயத்தில் அலைச்சலை சந்திப்பீர்கள்.
மீனம்
பிறரின் பிரச்சனையில் தலையிடாமல் இருந்தால் சிக்கலில் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள்.
ஞாபக மறதியால் நல்ல வாய்ப்பும் பறிபோகும்.
வியாபாரத்தில் நல்ல ஏற்ற நிலை உண்டாகும்.