Home » இன்று கவனமாக செயல்பட வேண்டிய ராசிக்காரர்கள்

இன்று கவனமாக செயல்பட வேண்டிய ராசிக்காரர்கள்

by Vaishnavi S
0 comment

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று வியாபாரிகளுக்கு லாபகரமான நாள். பண விடயத்தில் வருமானம் நன்றாக இருந்தாலும், செலவுகள் அதிகரித்து பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்கள் பயணங்கள் சில காரணங்களால் தள்ளிப்போகலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இன்று கவலைகளை மறந்து உங்கள் மீது கவனம் செலுத்தவும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்கும். வேலை தொடர்பாக அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் சில ஆலோசனைகளை பெறுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே, சமீபத்தில் நீங்கள் செய்த சிறிய முதலீட்டில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கு பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். அதீத நம்பிக்கையைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்களின் திறமையை வெளிப்படுத்தும் பொன்னான வாய்ப்பை பெறுவீர்கள்.
பெரிய முன்னேற்றத்தை நீங்கள் காணும் நாள் இன்று. ஆரோக்கியத்தை புறக்கணிக்க வேண்டாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று பண விடயத்தில் கலவையான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். உடல்நலம் பலவீனமாக இருக்கும் என்பதால் ஓய்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, வேலையுடன் சொந்த தொழில் தொடங்க திட்டமிட்டால், நீங்கள் அனுபவம் வாய்ந்த ஒருவரின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் உடன்பிறந்தோருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, சட்ட விடயங்களில் சிக்கிக் கொள்ளக் கூடிய சூழல் ஏற்படலாம். பெரிய திட்டத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு ஆழமாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று நீங்கள் சில ஆபத்தான முடிவுகளை எடுக்கலாம். பல வகையான எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றலாம். ஆனாலும் நிதி நிலை நன்றாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் நிறைய அலைய வேண்டிய நிலை இருக்கும். நிதி நிலையை வலுப்படுத்த உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு திருமண வாழ்வில் புதிய திருப்பம் ஏற்படலாம். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சட்ட ஆலோசனை பெற இன்று பொருத்தமான நாள். உடல்நலம் இன்று கடுமையாக மோசமடையலாம்.

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00