102
பட்ஜெட் விலையில் அற்புதமான அம்சங்களுடன் சாம்சங் நிறுவனம் புதிய மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
50Mp கேமரா, 1Tb மெமரி மற்றும் 5000mAh பேட்டரி ஆகிய அம்சங்களை உடைய Samsung Galaxy A05 மொபைல் 9,999 ரூபாய்க்கு சந்தைக்கு வந்துள்ளது.
மேலும் இதில் ஆண்ட்ராய்டு 13 OS கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) எனும் சிப்செட் உள்ளது.
1Tb அளவிலான Micro SD card சப்போர்ட்டும் உள்ளது.
50mp வைடு ஆங்கிள் முதன்மை கேமிராவும், 2mp டெப்த் சென்சார் கேமிராவும், 8mp செல்ஃபி கேமிராவும் உள்ளது.
இதில் பக்கவாட்டில் ஃபிங்கர் ப்ரின்ட் ஸ்கேனர் (side-mounted finger print scanner) உள்ளது.
25w ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
4 GB Ram, 64 GB மெமரி மற்றும் 6 GB Ram மற்றும் 128 GB மெமரி ஆகிய இரு அம்சங்களுடன் இந்த போன் லைட் கிரீன், சில்வர் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ளது.
4ஜிபி மொடலின் விலை 9,999 ரூபாயாகவும், 6ஜிபி மொடலின் விலை 12,499 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் நல்ல அம்சங்களுடன் கூடிய சாம்சங் போனை எதிர்பார்த்தவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது