குரோதி வருடம் ஆனி மாதம் 31 ஆம் தேதி திங்கட்கிழமை 15.07.2024 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.
தள்ளிப்போன திருமணப் பேச்சு வார்த்தையை திறமையாக முடிப்பீர்கள்.
வேலையிடங்களில் அன்பைக் காட்டி அனுகூலத்தைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
பணியிடத்தில் உங்களுக்கு எதிரிகள் முளைப்பார்கள்.
கடுமையாக வேலை செய்தாலும் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவது கடினம்.
ஆன்லைன் வர்த்தகங்கள் ஆபத்தை உண்டாக்கும்.
மிதுனம்
வெளியூர் பயணங்களில் பெரிய லாபம் அடைய மாட்டீர்கள்.
தொழிலில் அதிக முதலீடு செய்ய தயங்குவீர்கள்.
அடுத்தவருடைய பேச்சை நம்பி அகலக் கால் வைக்காதீர்கள்.
கடகம்
தொழில் படுமுன்னேற்றகரமான நிலையை காண்பீர்கள்.
பணவரவில் தாராளமான நிலையை அடைவீர்கள்.
உறவுகளில் இருந்த உரசல்களைச் சரி செய்வீர்கள்.
சிம்மம்
கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்களை அடையாளம் காண்பீர்கள்.
தொழிலுக்கு எதிராக தோன்றிய போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.
வியாபாரத்தை விரிவுபடுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
கன்னி
உங்கள் சொல்லுக்கு வீட்டில் மரியாதை அதிகரித்து சந்தோஷம் அடைவீர்கள்.
பொதுநல சேவையால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.
பதவி உயர்வுக்கான வேலைகளை செய்வீர்கள்.
துலாம்
நல்லதையே செய்தாலும் கெட்ட பெயர் எடுப்பீர்கள்.
வேண்டிய நபருக்கு நீங்கள் உதவி செய்வீர்கள்.
ஆனால், அது வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடிக்காததால் இம்சைப்படுவீர்கள்.
விருச்சிகம்
கொடுத்து வைத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால் விவகாரம் வந்து சேரும்.
கல்யாணம் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கச்சிதமாக பேசுங்கள்.
ஆடம்பரமாகச் செலவு செய்யாதீர்கள்.
தனுசு
தொட்டதெல்லாம் துலங்கி சந்தோஷத்தில் துள்ளுவீர்கள்.
விட்ட பணத்தை வியாபாரத்தில் மீட்டெடுப்பீர்கள்.
கூட்டாகத் தொழில் செய்ய ஒப்பந்தம் போடுவீர்கள்.
மகரம்
தகவல் தொழில்நுட்பத் துறையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.
அரசு ஊழியர்கள் பதவி உயர்வும் இடமாற்றமும் அடைவீர்கள்.
புதிய வீடு கட்டுவதற்காக அடித்தளம் அமைப்பீர்கள்.
கும்பம்
தந்தையின் ஆலோசனையால் புதிய தொழில் தொடங்குவீர்கள்.
உறவினர்கள் வருகையால் வீட்டை கலகலப்பாக்குவீர்கள்.
சுப காரியங்களுக்கான முன்னேற்பாடுகள் செய்வீர்கள்.
மீனம்
அவசரமான காரியமாக இருந்தால் வெளியூர் செல்லலாம்.
இல்லையெனில் பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது.
திமிராகப் பேசி வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)