Home » இன்றைய ராசிபலன்: 30 மே , 2024

இன்றைய ராசிபலன்: 30 மே , 2024

by namthesamnews
0 comment

குரோதி வருடம் வைகாசி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 30.05.2024 சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்துவீர்கள்.

மற்றவர்கள் நலனுக்காக அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

வியாபாரத்திற்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவீர்கள்.

ரிஷபம்

பணப்பயிர் விவசாயத்தில் மனம் போல் லாபத்தைப் பெறுவீர்கள்.

தோப்பு குத்தகையின் மூலமாக வருவாய் பெறுவீர்கள்.

வயிற்று வலியால் பாதிக்கப்படுவீர்கள்.

மிதுனம்

குடும்பத்துடன் குதூகலமாக உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

திட்டமிட்டு எதிர்கால சேமிப்பை உயர்த்துவீர்கள்.

கட்டுமானத் துறையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள்.

கடகம்

தொழில் சம்பந்தமாக தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மனைவியின் வீட்டாரோடு மல்லுக்கட்டுவீர்கள்.

தொழில்துறையில் இடர்ப்பாடுகளை சந்திப்பீர்கள்.

சிம்மம்

தடைபட்ட திருமணப் பேச்சுவார்த்தை தொடங்கி நல்ல முடிவை எட்டுவீர்கள்.

மைத்துனரின் உதவியால் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள்.

மனம் விரும்பும் பெண்ணை எதிர்ப்புகளுக்கிடையே கரம் பிடிப்பீர்கள்.

கன்னி

எதிர்பார்த்த அளவு அரசாங்க உதவி பெற மாட்டீர்கள்.

கடினமாக உழைத்து வியாபார இலக்கை எட்டுவீர்கள்.

காதலியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.

துலாம்

வீட்டம்மாவிடம் விதண்டாவாதமாகப் பேசாதீர்கள்.

சொந்தமாக சமைத்து சாப்பிடும் நிலைக்கு ஆளாவீர்கள்.

பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிக்க தவறாதீர்கள்.

விருச்சிகம்

கார் வாங்கும் உங்கள் ஆசை நிறைவேற இன்று அடி போடுவீர்கள்.

சகோதரரிடம் இருந்த பகை விலகி பரம்பரைச் சொத்தின் வில்லங்கம் தீர்ப்பீர்கள்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வசதியைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

தனுசு

நெருங்கிய உறவினர் வீட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள்.

மனத் தைரியத்தோடு வேலையில் ஈடு படுவீர்கள்.

அரசு ஊழியர்கள் கடமையைச் செய்யும்போது மிரட்டலுக்கு அஞ்ச மாட்டீர்கள்.

மகரம்

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

அரசாங்க வேலைக்காகத் தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள்.

வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள்.

கும்பம்

வியாபாரம் சிறப்பாக நடந்தாலும் கையில் காசு தங்காமல் சிரமப்படுவீர்கள்.

குடும்பத்தில் மனைவிக்கு மருத்துவ செலவு செய்வீர்கள்.

நண்பரின் தேவைக்கு பணம் கொடுத்து உதவுவீர்கள்.

மீனம்

அண்டை வீட்டாரிடம் அன்பாக நடந்து கொல்வீர்கள்.

மனதில் உள்ளதை தெளிவாக மனைவியிடம் எடுத்துச் சொல்லுவீர்கள்.

ஐடி ஊழியர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00