Home » இன்றைய ராசிபலன்: 8 ஏப்ரல், 2024

இன்றைய ராசிபலன்: 8 ஏப்ரல், 2024

by namthesamnews
0 comment

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 26 ஆம் தேதி திங்கட்கிழமை 08.04.2024 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

வீண் அலைச்சலால் பொருள் விரையம் ஏற்படுத்துவீர்கள்.

உடன் வேலை செய்பவர்களால் டென்ஷன் அடைவீர்கள்.

மனநிலை புரியாமல் குடும்பத்தினர் குத்தலாகப் பேசுவதால் வேதனைப்படுவீர்கள்.

ரிஷபம்

கட்டுமானத் தொழிலை கன ஜோராக நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் வெற்றிகரமான உத்திகளைக் கையாளுவீர்கள்‌.

அலைச்சல் அதிகமானாலும் தொழிலுக்குத் தேவையான ஆர்டர்களைப் பெற்று வருவீர்கள்.

மிதுனம்

நினைத்த காரியத்தை நடத்திக் காட்டுவீர்கள்.

வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி பண்ண கடுமையாக உழைப்பீர்கள்.

சொந்தத்தில் திருமணம் பேசி முடிப்பீர்கள்.

கடகம்

நில விற்பனை மூலம் பணவரவை அதிகப்படுத்துவீர்கள்.

மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்குவீர்கள்.

இல்லறத்தில் கசப்புணர்வை போக்குவீர்கள்.

சிம்மம்

அடுத்தவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள்.

உடன் வேலை செய்பவர்கள் கொடுக்கும் தொல்லையால் மன வேதனைப் படுவீர்கள்.

கன்னி

கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி ஒற்றுமையை பலப்படுத்துவீர்கள்.

புது வியாபாரம் தொடர்பான காரியங்களை சாதகமாக முடிப்பீர்கள்.

உறவினர்களிடம் அனுசரித்துப் போவீர்கள்.

துலாம்

வியாபாரத்திற்கு இடையூறு செய்பவர்களை அடையாளம் காண்பீர்கள்.

புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள்.

பங்குப் பரிவர்த்தனை வியாபாரம் மந்த நிலையில் இருப்பதால் எச்சரிக்கையாக முதலீடு செய்வீர்கள்.

விருச்சிகம்

வியாபாரத்துக்கு உதவியான நல்ல செய்தி வெளிநாட்டிலிருந்து பெறுவீர்கள்.

வேலை காரணமாக சில நாட்கள் வெளியூரில் தங்குவீர்கள்.

கலைத்துறையினர் புதிய சாதனை படைப்பீர்கள்.

தனுசு

பிடிவாதமாக நின்று நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள்.

தாய் வழி சொத்தில் உங்களுக்கு உரிய பங்கை அடைவீர்கள்.

ரியல் எஸ்டேட் தொழில் இரு மடங்கு லாபம் பார்ப்பீர்கள்.

மகரம்

உங்களை மட்டம் தட்ட நினைப்போருக்கு நல்ல பாடம் புகட்டுவீர்கள்.

துணிச்சலுடன் எந்தக் காரியத்திலும் இறங்குவீர்கள்.

புதிய ஆர்டர்கள் மூலம் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

கும்பம்

வங்கியில் எதிர்பார்த்த லோனை உரிய நேரத்தில் பெறுவீர்கள்.

நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

தொழில் சம்பந்தப்பட்ட மிஷின்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வீர்கள்.

மீனம்

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த வேலையும் செய்யாதீர்கள்.

தொழிலில் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க தவறாதீர்கள்.

வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00