85
பாகிஸ்தானில் உள்ள இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள இராணுவ தளத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டத்தில் தற்காலிக இராணுவ தளம் ஒன்று பள்ளிக் கட்டிடத்தில் அமைந்திருந்தது.
இந்த தளத்தின் மீது அதிகாலை 2:30 மணியளவில் தற்கொலைப்படை தாக்குதலான குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இதில், உறங்கிக்கொண்டிருந்தவர்களில் 23 பேர் பரிதாபமாக உயிரழந்தனர்.
மேலும், வெடிப்பின் மூலம் சுவர்கள் இடிந்து விழுந்ததினால் பலர் இறந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அடிபட்டவர்களுக்கு பலமான காயங்கள் இருப்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து, இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.