98
சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில் மோசமாக பேசியது சர்ச்சையானது. அந்த வீடியோவில் நடிகைகள் ரோஜா, குஷ்பு உள்ளிட்டோரின் பெயர்களையும் அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக திரிஷா தன் சமூக வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதேபோல் லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் இந்த விடயம் விஸ்வரூபம் எடுக்க, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகை குஷ்பு ஆகியோரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, குஷ்பு தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினராக இருப்பதால் மேலதிகாரிகளிடம் பேசி சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறினார்.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி வீடியோ இவ்விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “திரிஷா குறித்து மன்சூர் அலி கான் பேசிய விவகாரம் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரை சென்றுவிட்டது.
மேலும், நடிகை குஷ்பு மகளிர் ஆணையம் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். ஆனால் இதே அக்கறையை ஏன் நான் சீமான் மீது புகார் கூறியபோது வரவில்லை?” என விளாசியுள்ளார்.
மேலும் அவர், “பெண்கள் விடயத்தில் உண்மையில் பெரியார் தோழர்கள் தான் இதை தைரியமாக நடவடிக்கை எடுக்க முன் வருகிறார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு என்று குரல் கொடுப்பவர்கள் பெரியார் தோழர்களே ” எனவும் தெரிவித்துள்ளார்.